எதிர்வரும் 5 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அபிவிருத்தியும் சவாலும் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச நாடுகளுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது.
இதன்காரணமாக முதலீட்டுச் சந்தர்ப்பங்களை அதிகரிப்பதுடன் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். இதனால் சிறீலங்காவை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.