ஜாபர் சாதிக்கை கண்காணிக்க அரசு தவறியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

69 0

 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

2013-ல் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 4 பேர், 20 கிலோ போதைப் பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர். 11 ஆண்டுகள் கழித்து, தற்போது 3,500 கிலோ போதைப் பொருளைக் கையாள்கிறார். அவரை தமிழக அரசும், காவல் துறையும் கண்காணிக்க தவறியது ஏன்?பாஜக சார்பில் வரும் 7, 8-ம்தேதிகளில் தென்காசியில் போதைப் பொருட்களுக்கு எதிரான நிகழ்ச்சி நடத்த உள்ளோம். மக்களவைத் தேர்தலில் எனக்கு 39 தொகுதிகளிலும் பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்படுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.