சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அண்மையில் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு 9 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய விசாரணையின் பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.