தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் சாந்தனுக்கு மலர் அஞ்சலி

81 0

தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம் ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, நேற்றையதினம் (03.03.2024) மாலை 5.00 மணியளில் நடைபெற்றுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில், மாவட்ட கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் முருகதாஸ், ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.    மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் தற்போது அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அஞ்சலிக்காக யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவரது புகழுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.