யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு யேர்மனி நாட்டின் படைச் சிப்பாய் ஒருவர் இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக ரோட்டன்பர்க் காவல்துறையும் வெர்டனில் உள்ள சட்டவாளர் அலுவலகமும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இரண்டு இடங்களில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு குழந்தையும் அடங்கும். இத்துப்பாக்கிச் சூடு இரண்டு வீட்டுக் குடியிருப்புகளில் நடத்தப்பட்டது. ஒன்று வெஸ்டர்வெசெட்லிலும் (Westervesede) மற்றொன்று போத்தலிலும் (Bothel) நடந்தது.
சந்தேகநபரான படைச்சிப்பாய் சரணடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உள்நோக்கத்தை நிராகரிக்க முடியாது என்று காவல்துறை மற்றும் சட்டவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு இடங்களும் ஹன்னோவர் மற்றும் ப்ரெமனுக்கு அருகிலுள்ளது கிராமப்புங்கில் அமைந்துள்ளன.