கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கினர்.
அந்த தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி நிதியம் முன்னெடுத்துள்ள “கண்ணீரைத் துடைப்போம்” வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்தக் குழு இலங்கையின் நலன்புரிச் செயற்பாடுகளுக்காக மூன்றாவது முறையாக இந்த நிதியை வழங்கியுள்ளதோடு, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இக்குழுவினால் கொழும்பு கங்காராம விகாரைக்கு வழங்கப்பட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள 1,800 பௌத்த விகாரைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.