யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான மாணவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .