பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைக்க நடவடிக்கை!

74 0

பாடசாலை புத்தகப் பையின் சுமையை  குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுப்பாக அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து அதிபர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களுடன் சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை வகுப்பறையில் பாதுகாப்பாக வைக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் குறித்து சுற்றுநிருபத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.