குவைத்தில் உணவு விநியோகத்தை தாமதப்படுத்தியதற்காக வாடிக்கையாளர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கையர் தற்போது குவைத் இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சாகர லக்ஷ்மனன் என்ற நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி குவைத் நாட்டில் இடம்பெற்றுள்ளது. இவர் குவைத் நாட்டில் 8 வருட காலமாக வசித்து வந்த நிலையில் கார் ஒன்றின் மூலம் உணவு விநயோகம் செய்துக்கொண்டிருந்த போது வாடிக்கையாளர் ஒருவரது உணவை தாமதப்படுத்தியதால் குறித்த வாடிக்கையாளர் இவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் குவைத் இலங்கை தூதரகம் குவைத் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க குவைத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குவைத் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பாகவும் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவைத் இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.