சிப்பாயின் மரணம் தொடர்பில் 4 இராணுவத்தினர் கைது!

95 0

ஹொரண தொம்பகொட  இராணுவ முகாமில் உள்ள குளத்தில் சிப்பாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக அதே முகாமில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றும் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவ வீரர் உயிரிழந்த  தகவலை மறைத்தமை,  நீதிவானின் விசாரணையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் முரணாக இருந்தமை மற்றும் உண்மையை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் இருந்ததன் அடிப்படையிலேயே நான்கு இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பகொட இராணுவ உபகரணப் படையின் விளையாட்டுப் பகுதி அதிகாரியாக கடமையாற்றிய தரிந்து லக்க்ஷான் என்ற 24 வயதுடைய அதிகாரி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடதத்க்கது.