மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி 24 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற நால்வர் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 36,38 மற்றும் 44 வயதுடையவர்களாவர்.
கடந்த 12 ஆம் திகதி ரவத்தாவத்த பகுதியில் உள்ள குறித்த நிறுவனத்திற்குள் 4 கொள்ளையர்கள் நுழைந்து அங்கிருந்த உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி உரிமையாளரிடம் இருந்த 9 ஆயிரம் ரூபா பாணம், தங்கச் சங்கிலி, கைவளையல், 3 மோத்திரங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப்பொருள் பாவனைக்கு தேவையான பணத்திற்காக இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.