இளைஞன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை

34 0

இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.