அளுத்கமவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த பானங்களை விற்பனை செய்தவர் கைது!

42 0

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கமவில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப்பொள் கலந்த பானங்களை குடிப்பதாக  அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அளுத்கம நகரில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை விசேட பொலிஸ் குழுவினர் முகவராகப் பயன்படுத்திச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது அளுத்கம நகரின் பிரதான பாடசாலைக்கு அருகாமையில் இயங்கி வந்த கடையில், பாடசாலை  மாணவர்களுக்குக்  கஞ்சா கலந்த பானங்கள்  விற்பனை செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதானதுடன் அந்தக் கடையில் கஞ்சா கலந்த  சுமார் 500 பானங்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.