எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சுகாதார அமைச்சும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகம் செய்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நான் பணியாற்றினேன். இந்நிலையில் நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன் என்றார்.