ஈரான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian)உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.