பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலெஸ் பதில்பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோனிற்கு எதிரான சதிதிட்டம் குறித்த தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதா சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
யுக்திய நடவடிக்கைக்கு தலைமை தாங்குவது காரணமாக இருவரும் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்காக பெருந்தொகை பணத்தைவழங்கியுள்ளனர் என புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பதாக சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பதில்பொலிஸ்மா அதிபரின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி யுக்திய நடவடிக்கையை தடம்புரளச்செய்வதற்காக செல்வாக்குள்ள சில அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
யுக்திய நடவடிக்கை குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களிற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது இதன் காரணமாக அவர்கள் ஏதாவது செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சிலோன்டுடே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிரான நடவடிக்கைகளிற்காக குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகளை பயன்படுத்த முயல்கின்றது – இராஜதந்திரிகளை கூட பயன்படுத்த அவர்கள் முயல்கின்றனர் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கான குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது.