மாகாணசபை முறையை நீக்கவேண்டும்

101 0

மாகாணசபைமுறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைக்கவுள்ளதாக லங்காலோகய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் மகன் பசன்ட  யாப்பா அபயவர்த்தன தலைமையிலான அமைப்பொன்றே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

லங்காலோகய என்ற அமைப்பு மாகாண சபை முறையை நீக்கிவிட்டு மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.

பிரதேசசபைகளை வலுப்படுத்தும் யோசனையையும் இந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் மாகாணசபைமுறையை நீக்கவேண்டும்  என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள  பசன்ட  யாப்பா அபயவர்த்தன மாவட்ட சபைகளை உருவாக்குங்கள் பிரதேசசபைகளை வலுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுக்;கஇருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அமைச்சர்களை நியமிக்கவேண்டும் இதன் காரணமாக மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் வெள்ளை யானைகள் அவற்றினால் 1988 முதல் 7000பில்லியனை வீணடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளை தொடரவேண்டிய தேவையில்லை அவசியமில்லை வடக்கில் எவரும் மாகாணசபைகளுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளை தொடரவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.