கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது

272 0

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கல் பணிக்காக கடந்த மூன்று மாதங்களாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை 50 மில்லியன் டொலர் செலவில் விரிவாக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துள்ளதையடுத்து, இன்று தொடக்கம் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளன. இதனையடுத்து இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து வரும் யுஎஸ்-1162 விமானம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முதலாவதாக தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாளையிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையமானது வழமைபோன்று இயங்கவுள்ளதுடன், பயணிகள் மூன்று மணித்தியாலத்திற்கு முன்னர் விமானநிலையத்திற்கு வருகைதந்தால் போதுமானது என சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.