மேற்குஅவுஸ்திரேலியாவின் தொலைதூர பகுதியொன்றிற்கு படகு மூலம் சென்றடைந்த40க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் நவ்றுவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பீகிள்பே பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் சென்றுள்ளனர் அதன் பின்னர் பென்டர் பே பகுதிக்கு 15க்கும் அதிகமானவர்கள் சென்றுள்ளனர்.
இரண்டுகுழுவினரும் ஒரே படகிலேயே வந்துள்ளனர் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளவர்களில் 12 பங்களாதேஸ் பிரஜைகளும் இந்தியர் ஒருவரும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்துள்ளவர்களை அதிகாரிகள் நவ்றுவில் உள்ள தடுப்புமுகாமிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
இதேவேளை இறைமையுள்ள எல்லை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
படகுகளில் குடியேற்றவாசிகள் வருகையை எதிர்கட்சி தலைவர் கையாளும் விதத்திற்காக பிரதமர்அவரை சாடியுள்ளார்.
இறைமையுள்ள எல்லை நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது என உள்துறை அமைச்சர் கிளாரா ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சரான பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட அனைவரும் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் அவர்கள் ஆயிரக்கணக்கான டொலர்களை வீணடித்துள்ளனர் தங்கள் உயிர்களை பணயம்வைத்துள்ளனர் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் பீகிள்பே பகுதிக்கு பாக்கிஸ்தான் பங்களாதேசை சேர்ந்த 20 பேர் படகுகள் மூலம்சென்றுள்ளனர்.
இவர்கள் இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றனர் உள்ளுர்மக்கள்அவர்கள் அருந்துவதற்கான நீரினை வழங்கியுள்ளனர் என ஏபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த பகுதிக்கு சென்றுள்ள அவுஸ்திரேலிய எல்லை படையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கடும் எல்லை பாதுகாப்பு கொள்கைகள் காரணமாக சட்டவிரோத படகுகள் மூலம் வரும் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய எல்லை பாதுகாவல் படை தெரிவித்துள்ளது.
நான் பாக்கிஸ்தானை சேர்ந்தவன் முன்னர் அவுஸ்திரேலியாவில் வசித்துள்ளேன் என்னை நாடு கடத்தினார்கள் என படகில் வந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானிற்கு திருப்பி அனுப்பப்பட்டவேளை நான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்ட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.