நெருக்கடியிலிருந்து ஒரு நாடு மீண்ட ஒரு சிறந்த வெற்றி கதை இலங்கை

72 0

இந்தியா போன்ற சகாக்களுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த இந்தோ பசுபிக் மூலோபாயம் வெற்றிபெற்றுள்ளமைக்கான உதாரணம் இலங்கை என அமெரிக்காவின் தென்னாசியா மத்திய ஆசியாவிற்கான   உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடகாலத்திற்கு முன்னர் இலங்கை நெருக்கடியில் சிக்குண்டிருந்தது வீதியில் பெரும் கலவரங்கள் காணப்பட்டன பெட்ரோல் உணவிற்காக மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இல்லம் கைப்பற்றப்பட்டது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் நீச்சல்தடாகத்தில் நீந்தினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்தீர்கள் என்றால் அது தற்போது முற்றிலும்வித்தியாசமான இடமாக காணப்படுகின்றது என டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

இலங்கையி;ன் நாணயம் ஸ்திரமான நிலையில் காணப்படுகின்றது பொருட்கள் எரிபொருட்களின் விலைகள் ஸ்திரமானதாக காணப்படுகின்றன கடன்மறுசீரமைப்பு குறித்த உத்திரவாதங்கள்  அவர்களிற்கு கிடைத்துள்ளன சர்வதேச நாணயநிதியத்தின்  நிதி கிடைக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எப்படி நடந்தது ? நண்பர்களின் சிறிய உதவியுடனே இது சாத்தியமானது என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி அமெரிக்காவும் அதன் சகாக்களும் சிறந்த திட்டங்களை முன்வைப்பார்கள் என்பதை அடிப்படையாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை மனிதாபிமான நெருக்கடியின் ஆரம்பத்தில் அந்த நாட்டிற்கு என்ன தேவைப்பட்டது என்றால் மனிதாபிமான உதவி என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி இந்தியா போன்ற நாடுகள் சலுகை கடன்களை வழங்குவதை நாங்கள் பார்த்தோம், இவை இலங்கை மிகவும் நெருக்கடியான தருணத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியது எனவும் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் இந்த நெருக்கடியான தருணத்தில் விவசாய உற்பத்திக்கான பொருட்களிற்காக மில்லியன் டொலர்களை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனைபொறுத்தவரை ஜப்பான் இந்தியா பிரான்ஸ் தலைமையிலான நாடுகள் இலங்கை தனது கடன்மறுசீரமைப்பை பேண்தகுமுறையில் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் பல மாதங்கள் ஈடுபட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் சீனா இந்த கடன்உத்தரவாதங்களுடன் இணங்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது இது சர்வதேசநாணயநிதியத்தின் நிதிவருகைக்கான சூழ்நிலையை உருவாக்கியது மேலும் இன்று இலங்கையின் பொருளாதாரத்தில் நீங்கள் காணும் மாற்றங்களை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.