நாளை தீர்மானமிக்க கலந்துரையாடல்

100 0

டெட் கொடுப்பனவு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல் கூடி பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் டெட் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள், கடந்த சில வாரங்களில் இரண்டு முறை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்ததையடுத்து கடந்த 15ஆம் திகதி காலை வேலை நிறுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி நாளை முற்பகல் 11.00 மணியளவில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.