10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

333 0

வழி அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இது குறித்து, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், அதற்கான தண்டப் பணமான 10 ஆயிரம் ரூபாவை செலுத்திவிட்டு மீண்டும் அனுமதிபத்திரமின்றியே பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்த நிலையிலேயே, 2 லட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.