சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார்

287 0

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ சேங்செங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவரான அவர், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

தமது இலங்கை விஜயத்தின்போது, அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து அவர், பேச்சுநடத்தவுள்ளார்.

அத்துடன், சீனாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.