கடன் சுமையில் சிக்குண்ட ராஜ்ஜியம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பலர் கடன்களை வழங்கவுள்ளதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் தற்போது பாரிய கடன் சுமையில் சிக்குண்டுள்ளதாக கூறுகிறார்கள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யாது கடனை செலுத்த முடியாது என்றும் வரிகளை அறவிடாமல் கடன்களை செலுத்த முடியாது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவதாக அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.