அவசரமாக தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம்!

41 0

மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட   யுஎல் 605 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மெல்பேர்ன் நேரப்படி இன்று மாலை 18.16 மணிக்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து, தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் மீண்டும் புறப்படும் வரை அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.