யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் 13 பேர் பலி

64 0

யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்  என பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.