சிங்கராஜா வனப் பகுதியின் பாதுகாப்பு வலயத்துக்குள் வீதி மற்றும் குளங்களை அமைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக சுற்றாடல் நீதி மய்யம் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வனஜீவராசிகள் அமைச்சர், சுற்றாடல் அமைச்சர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம், வனப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஆஜரானார்.