பாணந்துறையில் தேரர் மீது தாக்குதல் – இருவர் கைது

90 0

பாணந்துறையில் தேர் ஒருவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இந்த சந்தேக நபர்கள் பாணந்துறை ரங்கோத் விகாரைக்கு சென்று தேரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தேரர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை ரங்கோத் விகாரையின் தலைவரான களனி பல்கலைக்கழகத்தின் மனிதநேய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியராக தேரர் ஒரவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.