நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லையாம்!

45 0

நிகழ்நிலை பாதுகாப்பு சட்;டத்தின் இலங்கை பொலிஸார் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவரும் இதுவரை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவில்லைஅந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுவை நாங்கள் இதுவரை ஏற்படுத்தவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.