களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீதாவக்கபுரத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இது உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.