பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா (பிப்ரவரி 11) மாலை சென்னை வந்திருந்தார்.
தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமருக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழகம், பிரதமர் மோடியின் நினைவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
“பிரதமர் எங்கு சென்றாலும், தமிழை குறித்தும் தமிழ் மக்களை குறித்தும் பேசுகிறார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு பத்ம விருது அறிவித்து கௌரவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியின் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகில் எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, ” என்று தெரிவித்தார்.”