நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் – இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

78 0

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இன்று அந்த திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழில்நுட்பநிறுவனங்களின் அழுத்தங்களை தொடர்ந்தே அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என தொழில்நுட்பநிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.