வீதியில் நெல்லை பரப்பி உலர்த்திக்கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிளால் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்!

64 0

கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிரே நெல் பரவிக்கொண்டிருந்தவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.