மல்வத்து ஹிரிபிட்டியவில் உள்ள விஹாரையில் வைத்து கலப்பலுவாவே தம்மரத்தன தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து போதைப்பொருள், மூன்று டி 56 வெடிபொருட்கள், தோட்டாக்கள், வேன் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், சுகாதார ஆடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.