கந்தப்பளை – ஹைபொரஸ்ட் வீதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பிரதான வீதியில் உள்ள குருந்து ஓயா தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியில் நடந்து சென்றவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹைபொரஸ்ட் இல. 01 தோட்டத்தைச் சேர்ந்த வீரையா காந்தி எனும் 50 வயது மதிக்கத்தக்க ஒருவராவார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாரதியை ஹைபொரஸ்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலப்பனை நீதவானின் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பஸ் சாரதியை வலப்பனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.