நீர்கொழும்பில் ஒருவரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

46 0

நீர்கொழும்பு, கல்கந்த சந்தி பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் அளுத்ஹேன வீதி பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று (10) இரவு 7.00 மணிக்கும் 7.10 மணிக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மோட்டார் சைக்கிள் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரத்நாயக்கவின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சீதுவை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள் கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.