தலாத்து ஓயா, ஹாரகம, கோணாதோட்ட பிரதேசத்தில் உள்ள மகாவலி கங்கையில் நீராடிய ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தலாத்து ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிக் காணாமல் போனவர் குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அவர் நேற்று (10) மாலை நீராடியபோதே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.
காணாமல் போனவரை கண்டி பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரும் படையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளதுடன், தலாத்து ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.