ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைப்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் தொடர்பில் மார்ச் மாதம் 4 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும் ஜெனிவா நகர்வுகள குறித்து அங்குள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வீரகேசரிக்கு தெரிவித்தார்.
அதே போன்று இலங்கையின் சமகால மனித உரிமைகள் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.