கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

47 0

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (05) கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இரு மாணவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.