மஹிந்த தரப்பை சந்திக்கிறார் மைத்திரி

334 0

Maithree-and-Mahindaஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துரையாடல் ஒன்றின் பொருட்டு நாளைய தினம் தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு நாளை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறுவுள்ளது.
இதன்பொருட்டு தமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, சந்திரசிரி முத்துக்குமாரண மற்றும் விஜித பேருகொட ஆகியோர் தெரிவித்துள்ளனர்.