மரம் சரிந்து விழுந்த விபத்தில் மற்றொரு சிறுவனும் பலி

66 0

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு சிறுவனும் உயிரிழந்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10) காலை சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை சர்வதேச பாடசாலை வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகள் காயமடைந்ததுடன், ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிள்ளை ஒன்று 05 நாட்களுக்கு பின்னர் இன்று காலை உயிரிழந்தது.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.