முல்லைத்தீவு – நயினாமடு ராசபுரம், கனகராயன் குளம் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அனாமதேய கடிதத்தால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(10.02.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த கடிதமானது, “முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்” என்னும் தலைப்பிடப்பட்டு நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு வருகை தருமாறு பிழையான தமிழ் எழுத்துக்களால் பலரது மக்களின் பெயர் முகவரிகள் குறிப்பிட்டு 50 ரூபா முத்திரை ஒட்டப்பட்ட நிலையில் தபால் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார்கள்.
மேலும், அங்கு சென்று அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கடிதம் குறித்து வினவிய போது, கடிதத்திற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே சுமார் 50 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வந்த பல மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.