இந்திரனின் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதா?

52 0

Northern Uni’ என்ற பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி பெண் அரசியல் செயற்பாட்டாளர்  உமா சந்திரபிரகாஸ்

* புலம்பெயர் ஈழத்தமிழன் என அடையாளப்படுத்தப்படுபவரின் பல்கலைக்கழகம் என அடையாளப்படுத்தப்படும் ‘Northern Uni’ இற்கு ‘SLIT UNI’ உடனான தொடர்பு என்ன? பல்கலைக்கழக உருவாக்கத்திற்கு தேவைப்படும் தகைமை இல்லையெனில், தகைமை கொண்ட பல்கலைக்கழகத்திற்கு வழங்கலாமே? எதற்கு போலியாக ஈழத்தமிழன் என்ற வேடம்?

* அதியுயர் பாதுகாப்பு வலையங்களில் உள்ள மக்கள் காணிகளில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை உட்பட ஏக்கர் கணக்கான காணிகளை பல்கலைக்கழகம் உருவாக்கம் என்னும் போர்வையில் ‘Northern Uni’ இற்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்டதா? அமைச்சரவைப் பத்திரமில்லாமல் குறித்த காணிகளை அளக்கும் அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கொடுத்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி பெண் அரசியல் செயற்பாட்டாளர்  உமா சந்திரபிரகாஸ்