பன்னிபிட்டியவில் வீடொன்றில் தீ பரவல்

44 0

பன்னிபிட்டிய – பெலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 2 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.