பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கி வெடித்து மற்றொரு கான்ஸ்டபிள் காயம்!

61 0

ஒக்கம்பிட்டிய பொலிஸிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னிடமிருந்த  துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அது திடீரென செயற்பட்டு அவருக்கு அருகில் இருந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மீது  சூடுபட்டுள்ளது.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.