யாழ். மாவட்ட செயலாளர் – மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

78 0

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இணைந்துகொண்டார்.