குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார்

60 0

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் துணைத்தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

அவ்விடயங்களை கேட்டறிந்த இவன் ருட்ஜென்ஸ் குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என கூறியுள்ளார்.

அத்துடன் முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்து வட மாகாண அபிவிருத்திக்குத் தேவையான பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.