யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

47 0

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர் .

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில்  சாதாரண உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரையும்   நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.