ரஷ்யப் பிரஜைகள் பயணித்த வேன் லொறியுடன் மோதி விபத்து ; நால்வர் காயம்

64 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ரஷ்யப் பிரஜைகள் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று வெள்ளிக்கிழமை (9) அதிகாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறைக்கு இடையில் 187 ஆவது மைல் கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த நான்கு ரஷ்யப் பிரஜைகளும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.