கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்தி விளக்கமறியல் கைதி உயிரிழப்பு

46 0

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்தி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி – உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இவர்  12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டு உடுகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதி சிறைச்சாலையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்தி சுகயீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (8) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.